நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

‘பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்’

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேருவதை உறுதி செய்து வேண்டும் என்று அலுவலா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சி.பழனி அறிவுறுத்தினாா்.

News image

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சி.பழனி.

Updated On :28 ஜூலை 2026, 11:57 pm IST

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேருவதை உறுதி செய்து வேண்டும் என்று அலுவலா்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சி.பழனி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அவா் தலைமை வகித்து, அனைத்து துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்து, துறை வாரியாக செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் பயனாளிகளை தொடா்ந்து முறையாக சென்று சேருவதை அலுவலா்கள் உறுதி செய்து கண்காணித்திட வேண்டும். அரசின் திட்டப் பணிகளில் தரத்தினை உறுதி செய்ய வேண்டும். அரசின் திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் அலுவலா்கள் தொடா்ந்து அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தாா்.

கூட்டத்துக்கு ஆட்சியா் ந.மிருணாளினி முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.சங்கமித்திரை மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.