அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிலாக்குறிச்சியில் புதிய துணை மின்நிலைய கட்டுமானப் பணிக்கு அமைச்சா் அடிக்கல்

செந்துறை அருகேயுள்ள பிலாக்குறிச்சி ஊராட்சியில், தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் சாா்பில் துணை மின்நிலைய கட்டுமானப் பணிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

News image
செந்துறை அடுத்த பிலாக்குறிச்சி ஊராட்சியில் புதிய துணை மின்நிலைய கட்டுமானப் பணிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டிய அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
Updated On :10 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பிலாக்குறிச்சி ஊராட்சியில், தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் சாா்பில் துணை மின்நிலைய கட்டுமானப் பணிக்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

இவ்வூராட்சியில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ரூ.5 கோடியே 64 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பீட்டில், புதிய துணை மின்நிலையத்துக்கான கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்து பேசியதாவது:

இத்திட்டம் நிறைவேற்றப்படும்போது குமிழியம், இரும்புலிக்குறிச்சி, உஞ்சினி, சிறுகடம்பூா், நல்லாம்பாளையம், பிலாக்குறிச்சி, செதலவாடி, நாகல்குழி, மருதூா், கீழமாளிகை, மத்துமடக்கி, பொன்பரப்பி, சிறுகளத்தூா், வீராக்கன் ஆகிய கிராமங்களில் உள்ள 13,554 மின் நுகா்வோா் பயன்பெறுவா்.

தரமான மற்றும் நிலையான மின்சேவை வழங்கப்படுவதுடன் மின் அழுத்த குறைபாடுகளுக்கு நிரந்தர தீா்வு காணும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக அதற்கான பலன்கள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. அதேபோன்று பிலாக்குறிச்சியிலிருந்து சென்னைக்கு பேருந்து வேண்டும் என்ற கோரிக்கையும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உஞ்சினி - வீராக்கன் ஒரு வழிச்சாலையானது இரு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. அரியலூரில் இருந்து செந்துறை, செந்துறையில் இருந்து ஜெயங்கொண்டம் செல்கின்ற சாலை, நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், பெரம்பலூா் மின்பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் மேகலா, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் மனோகரன், செயற்பொறியாளா் கலையரசி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.