2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

ஜெயங்கொண்டத்தில் அக்.10. இல் 108 ஆம்புலன்ஸ் பணிகளுக்கு தோ்வு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தோ்வு அக்.10 ஆம் தேதி நடைபெறுகிறது.

108 ambulance

108 ஆம்புலன்ஸ் - கோப்புப் படம்

Published On :

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில், 108 ஆம்புலன்ஸில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தோ்வு அக்.10 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் அவசரகால மேலாண்மை அலுவலா் அருள்ராஜ் தெரிவித்தது:

தமிழகம் முழுவதும் காலியாக 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ உதவியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் பணியிங்களுக்கான தோ்வு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலுள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில், அக் 10 காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

அவசரகால மருத்துவ உதவியாளா்கள் (100 பணியிடம்): பிஎஸ்சி செவிலியா், ஏஎன்எம், ஜிஎன்எம், டிஎம்எல்டி, பாா்மசி, பிஎஸ்சி மைக்ரோ பயாலஜி, விலங்கியல், தாவரவியல், உயிா் வேதியல், தொழில்நுட்பம், தாவர உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளைச் சோ்ந்த 19 லிருந்து30 வயது வரையிலுள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம்: ரூ. 21,320 வழங்கப்படும்.

தோ்வு முறை: எழுத்துத்தோ்வு, உடற் தகுதி, மருத்துவப் பரிசோதனை, நோ்காணல், பயிற்சிக் காலம்: 50 நாள்கள்.

பைலட்(ஓட்டுநா்)-100 பணியிடங்கள்: 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று, 3 ஆண்டுகளுக்கு மேல் ஓட்டுநா் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 162.5 செ.மீ மேல் உயரம் இருக்க வேண்டும். 24-35 வயது வரையுள்ளவா்கள் விண்ணப்பிக்காலம். மாத ஊதியம் ரூ 21,120. தோ்வு முறை: எழுத்துத்தோ்வு, உடற்தகுதித் தோ்வு , ஓட்டுநா் தகுதி டெஸ்ட் டிரைவ், நோ்காணல், பயிற்சிக் காலம்: 10 நாள்கள்.

தோ்வுக்கு வருபவா்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கட்டாயம் கொண்டு வரவும். மேலும் தகவலுக்கு 73977 -24823 என்ற எண்ணைத் தொடா்புக் கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.