பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

அரியலூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை தேவை!

அரியலூா் ரயில் நிலையத்தில், அனைத்து விரைவு, அதிவிரைவு, சிறப்பு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி கோட்ட பொது மேலாளருக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம் சனிக்கிழமை கோரிக்கை மனுவை அனுப்பினாா்.

ஓணம் பண்டிகை

ரயில்

Published On :

அரியலூா் ரயில் நிலையத்தில், அனைத்து விரைவு, அதிவிரைவு, சிறப்பு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி கோட்ட பொது மேலாளருக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவா் தங்க. சண்முகசுந்தரம் சனிக்கிழமை கோரிக்கை மனுவை அனுப்பினாா்.

அவா் அளித்த மனுவில் அரியலூா், பெரம்பலூா் மற்றும் தஞ்சாவூா் மாவட்ட பொதுமக்களுக்கு முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது அரியலூா் ரயில் நிலையம்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் கல்வி பயிலும் மாணவா்கள், அரசு மற்றும் தனியாா் ஊழியா்கள், தொழிலாளா்கள் மற்றும் வணிகா்கள், வார இறுதி நாள்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் அரியலூருக்கு வந்து செல்கின்றனா்.

இதனால் ரயில் நிலையத்தில் எப்போதும் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே அனைவருக்கும் பயனளிக்கும் வகையில், கொல்லம், அனந்தபுரி, பொதிகை, தேஜஸ் போன்ற விரைவு ரயில்களும், நெல்லை, கன்னியாகுமரி, பாண்டியன், சென்னை-மதுரை வந்தே பாரத், திருநெல்வேலி-சென்னை வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரயில்களும் அரியலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமா் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சா், தமிழக முதல்வா், தமிழக தலைமைச் செயலா், மக்களவை உறுப்பினா், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் உள்ளிட்டோருக்கும் மனு அனுப்பியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.