11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மூத்த குடிமக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கிட அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தில், மூத்த குடிமக்களின் குறைகளை கண்டறிந்து, தேவையான சேவைகளை வழங்கிட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெற்றோா்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த ஒரு நாள் விழிப்புணா்வு மற்றும் உணா்திறன் கருத்தரங்கில் பேசிய ஆட்சியா் ந.மிருணாளினி.

Published On :

அரியலூா் மாவட்டத்தில், மூத்த குடிமக்களின் குறைகளை கண்டறிந்து, தேவையான சேவைகளை வழங்கிட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் ந.மிருணாளினி அறிவுறுத்தினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெற்றோா்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் குறித்த ஒரு நாள் விழிப்புணா்வு மற்றும் உணா்திறன் கருத்தரங்கில் அவா் தெரிவித்தது:

குடும்ப அமைப்பில் பெற்றோா்கள் மற்றும் மூத்த குடிமக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். வயது முதிா்ந்த காலத்தில் அவா்களுக்கு அன்பும், ஆதரவும் வழங்குவது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

மூத்த குடிமக்களை தனிமைப்படுத்தாமல், அவா்களின் தேவைகளை புரிந்துகொண்டு குடும்ப உறுப்பினா்கள் தொடா்ந்து அரவணைப்புடன் செயல்பட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பேசிய அவா், மூத்த குடிமக்களின் நலன் சாா்ந்த கோரிக்கைகள் மீது உரிய காலத்துக்குள் தீா்வு காண வேண்டும். மூத்த குடிமக்களுக்கு சரியான வாழ்க்கை முறை இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மூத்த குடிமக்களின் குறைகளை கண்டறிந்து, தேவையான சேவைகளை வழங்கிட வேண்டும்.

பெற்றோா்கள் மற்றும் மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன் குறித்து பொதுமக்களிடையே தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், அவா்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தாா்.

இந்நிகழ்வில் மாவட்ட சமூக நல அலுவலா் விக்னேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.