: பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற கரூர் மாவட்டம் புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பாராட்டப்பட்டனர்.
புகழூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வை 194 பேர் எழுதினர். இதில் 174 பேர் வெற்றி பெற்று 90 சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தப் பள்ளியின் மாணவி சொர்ணலட்சுமி 1,065 மதிப்பெண் முதலிடத்தையும், மாணவி சுஜாதா, 1,041 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், வினோதினி, தேவிகா ஆகியோர் தலா 1,033 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடத்தையும் பெற்றனர்.
இந்த மாணவிகளை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன், புஞ்சைபுகளூர் பேரூராட்சித் தலைவர் லலிதா, பள்ளி தலைமையாசிரியர் தங்கவேல், உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் ஆகியோர் பாராட்டினார்.
இப்பள்ளியில் 6,7-ம் வகுப்புகளில் ஆங்கில வழி கல்வி செயல்படும் என்று பள்ளி தலைமையாசிரியர் கூறினார்.
புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 136 பேர் தேர்வெழுதினார். இதில் 116 பேர் வெற்றி பெற்று, 85 சத தேர்ச்சி பெற்றனர். இதில் கதிரேசன் 1,012 மதிப்பெண் முதலிடத்தையும், வினோத் 976 மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், தினேஷ் 964 மதிப்பெண்கள் 3-ம் இடத்தையும் பெற்றனர்.
இந்த மாணவர்களை தலைமையாசிரியர் வெங்கடாசலம், உதவித் தலைமை ஆசிரியர் தங்கவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் பாராட்டினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறி
அதிமுக உள்கட்சி மோதல்: தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
