ஒரு சதவீத மத்திய கலால் வரியை நீக்க வலியுறுத்தி நகைக்கடைகள் நடத்திய கடையடைப்பு மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கரூர் ஷராப் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கே. ரவீந்திரகுமார் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து,
கரூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 4-ம் தேதி வரை கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இதில் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் இக்கடையடைப்புப் போராட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று (மார்ச் 5-ம் தேதி) தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகைக்கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




