2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

தீபாவளி பண்டிகை: கரூர் உழவர் சந்தையில் ஒரே நாளில் 22,890 கிலோ காய்கறிகள் விற்பனை

தீபாவளி பண்டிகை நாளன்று கரூர் உழவர் சந்தையில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 22,890 கிலோ காய்கறிகள் விற்பனையானது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 1:52 am

DIN

தீபாவளி பண்டிகை நாளன்று கரூர் உழவர் சந்தையில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 22,890 கிலோ காய்கறிகள் விற்பனையானது.
 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் உழவர் சந்தையில் புதன்கிழமை காலை முதலே  மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வழக்கத்தை விட காய்கறி விற்பனையும் அதிகரித்தது. தக்காளி கிலோ ரூ.45, சின்னவெங்காயம் ரூ.70, 80, பீன்ஸ் ரூ.65, கேரட் ரூ.50 என விற்பனையானது.
இதுதொடர்பாக சந்தை மேற்பார்வை அதிகாரி கூறுகையில், வழக்கத்தை விட தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். நுகர்வோர் சுமார் 4,000 பேர்  காய்கறிகளை வாங்கினர். 143 விவசாயிகள் எடைபோட்டு காய்கறி வியாபாரம் செய்தனர்.  இங்கு புதன்கிழமை மட்டும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள சுமார் 22,890 கிலோ காய்கறிகள் விற்றுத் தீர்ந்தன என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.