கவிதைகள் சமூக அவலத்தைப் பேச வேண்டும் என்றார் திரைப்பட பாடலாசிரியர் விக்டர்தாஸ்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்ப்பட்டறை பசுமை இயக்க தொடக்க விழா மற்றும் கவிஞர் கரூர் பூபகீதன் எழுதிய வேர்களின் குறுக்குவெட்டுத் தோற்றம், கவிஞர் ராசமாணிக்கம் எழுதிய நான் எனும் மண்குடம் எனும் நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
கவிதைகள் இந்த சமூகத்தின் அவலத்தைப் பாடுவது, சமூகம் சார்ந்து பேசுவதாக இருக்க வேண்டும். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உடைந்துபோன இதயத்திற்காக குரல்கொடுப்பவையாக இருக்க வேண்டும். 35 ஆண்டுகளைத் தாண்டி 2000 முதல் 2006 வரை 120 படங்களுக்கு மேல் திரைப்பாடல் எழுதியுள்ளேன்.
முன்னணி இசையமைப்பாளர்களுக்கும் பாடல் எழுதியுள்ளேன். எனது வரிகளில் சமுதாயம் சார்ந்த கருத்துகள் இடம் பெற்றிருக்கும்.
கண்ணதாசன் மீது கொண்ட அளப்பரிய காதலால் 10 வயதிலேயே அவரது கவிதையை ருசித்தவன். உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் எந்த காவியத்தை யார் இயற்றினார்கள் எனத் தெரியாமல் பேசுகிறார்கள். இது அரசியல் மேடை இல்லையென்றாலும், தமிழ்ப் பற்றாளன் என்ற முறையில் மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.
தமிழ்ப்பட்டறை இலக்கிய பேரவையின் நிறுவனர் சேக்கிழார் அப்பாசாமி தலைமை வகித்தார். பேரவையின் கவிஞர் கருவை ந. ஸ்டாலின் வரவேற்றார். தலைமை மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கோமதி கேசவன், புருஷோத்தமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கவிஞர் செ. ராசமாணிக்கம் எழுதிய நான் எனும்
மண்குடம் எனும் முதல்நூலை திரைப்பட பாடலாசிரியர் விக்டர்தாஸ் நூலை வெளியிட, ஆசிரியர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.
கவிஞர் கரூர் பூபகீதன் எழுதிய வேர்களின் குறுக்குவெட்டுத்தோற்றம் நூலை அஸ்ரப்அலி வெளியிட தமிழ்பட்டறை இலக்கிய நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். விழாவில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கீரனூரில் போட்மெயில் விரைவு ரயில் நின்றுசெல்ல எதிா்பாா்ப்பு

புனரமைத்தும் பூட்டிக்கிடக்கும் உடற்பயிற்சிக் கூடம்! பயன்பாட்டுக்கு கொண்டுவர எதிா்பாா்ப்பு

திண்டுக்கல் மாநகாரட்சிப் பகுதியில் 4 இடங்களில் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள்!






