எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

மானுடவியல் குழு பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்

தேவேந்திரகுல வேளாளர் மானுடவியல் குழு ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:21 am IST

தேவேந்திரகுல வேளாளர் மானுடவியல் குழு ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகனிடம்  அனைத்துக் கட்சியிலுள்ள  தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது: தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான பட்டியல் வகுப்பில் உள்ள 7 உள்பிரிவுகளை இணைத்து, தேவேந்திரகுல வேளாளர் எனப் பெயர் திருத்தம் செய்யக் கோரி போராடி வருகிறோம்.
 அண்மையில் தேவேந்திரகுல வேளாளர் என பெயர் திருத்தத்திற்கான மானுடவியல் ஆய்வறிக்கையை மாநில அரசிடம் சென்னைப்  பல்கலைக்கழக மானுடவியல் துறை சமர்ப்பித்துள்ளது.  இதை உடனடியாக மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.
இந்து மக்கள் கட்சி : கிருஷ்ணராயபுரம் அடுத்த முனையனூர் சமத்துவபுரத்தில் 45 குடும்பங்கள் வசிக்கின்றன.  குடிநீர், தார்ச்சாலை, மின்வசதி மற்றும் பயணிகள் நிழற்குடை இல்லை. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் தெரிவித்தும் அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. எனவே உடனடியாக வசதிகளை செய்துதர வேண்டும்.
நெடுங்கூர், ஆரியூர், க.பரமத்தி  கிராம மக்கள் : அரவக்குறிச்சி அருகே நெடுங்கூரில் இரும்புக்கம்பி தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.  இத்தொழிற்சாலை அமைந்தால்  கொதிநீரால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலை உள்ளது.  அதிகளவில் ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் உறிஞ்சப்படும் என்பதால் குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்படும்.  கிராம மக்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் தொழிற்சாலை அமையாதவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.