40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆடுகளைத் திருட  முயன்ற 3 பேர் கைது

கரூர் மாவட்டம் கடவூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து ஆடுகளை திருட முயன்ற 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.

Updated On :5 நவம்பர் 2018, 8:47 am IST

கரூர் மாவட்டம் கடவூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்து ஆடுகளை திருட முயன்ற 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
கடவூர் அடுத்த தந்துவார்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன். இவர், அதே பகுதியில் தனது தோட்டத்தில் ஆட்டுக்கொட்டகை அமைத்து ஆடுகள் வளர்த்து வருகிறார். சனிக்கிழமை இரவு இவரது தோட்டத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆடுகளைத் திருட முயன்றனர். 
அப்போது ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த காளியப்பன் ஆடுகளைத் திருட முயன்ற மர்மநபர்களைப் பார்த்து "திருடன், திருடன்' என சப்தமிட்டார். இதனால் அப்பகுதியினர் ஓடி வந்து திருடர்களைப் பிடித்து பாலவிடுதி போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில், கடவூர் அடுத்த துளிப்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி(65), பசுபதி, பாலகிருஷ்ணன் ஆகியோர் எனத் தெரியவந்தது. போலீஸார் மேற்கொண்டு விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.