இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

விநாயகர் ஊர்வலத்துக்கு ஆலோசனை

சிலை ஊர்வலத்தின்போது அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்றார் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்.  

Published On :

சிலை ஊர்வலத்தின்போது அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்றார் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்.  
கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெற உள்ளதை முன்னிட்டு சிலை அமைப்பாளர்களுடன் காவல்துறை அதிகாரிகள் கலந்தாலோசனைக்கூட்டம் புதன்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம். பாஸ்கரன் பேசுகையில், நீதிமன்ற உத்தரவின்படி சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். களிமண்ணால் ஆன, ரசாயன கலவை பூசப்படாத சிலைகள் மட்டுமே  கரைக்க அனுமதிக்கப்படும். ஏற்கெனவே சிலைகள் கரைக்கலாம் என கண்டறியப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் கரைக்க அனுமதி கிடையாது என்றார் அவர். 
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலிக்கு) சி. பாரதி, துணைக் கண்காணிப்பாளர்கள் எம். கும்மராஜா, ஆர்.முத்துச்செல்வன், என். சுகுமார் மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்தோர்,  சிலை அமைக்கும் அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.