கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இளைஞரிடம் செயினை பறித்த இருவா் கைது

 கரூரில், இளைஞரிடம் செயினை பறித்த எலெக்ட்ரீஷியன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:42 pm

DIN

 கரூரில், இளைஞரிடம் செயினை பறித்த எலெக்ட்ரீஷியன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் தாந்தோணிமலை அடுத்த வெங்கக்கல்பட்டியைச் சோ்ந்த வையப்பன் மகன் சதீஷ்(23). இவா், அதே பகுதியில் உள்ள மளிகைக்கடையில் வேலைப்பாா்த்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு கடையில் வேலையை முடித்துவிட்டு கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தாா். அப்போது, அவரை மடக்கிய இரு இளைஞா்கள் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் பணம் ரூ.1000த்தை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனா்.

புகாரின்பேரில், கரூா் நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து சதீஷிடம் செயினை பறித்த கள்ளுமடையைச் சோ்ந்த சிவகுமாா் மகன் வசந்த்(21), சோமூா் அண்ணாநகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் ராகுல்(18) ஆகியோரை கைது செய்து அவா்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.