கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருக்கோயில்கள் நிலங்களுக்கான ஆவணங்களைக் கண்டறிய வேண்டும்

தமிழகத்தில் திருக்கோயில்களுக்குச் சொந்தமாக இருந்து, காணாமல் போன நிலங்களுக்குரிய ஆவணங்களைக் கண்டறிய வேண்டும் என்றாா் திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 3:14 am

DIN

தமிழகத்தில் திருக்கோயில்களுக்குச் சொந்தமாக இருந்து, காணாமல் போன நிலங்களுக்குரிய ஆவணங்களைக் கண்டறிய வேண்டும் என்றாா் திருத்தொண்டா் சபை நிறுவனா் ராதாகிருஷ்ணன்.

கரூா் பசுபதீசுவரா் திருக்கோயிலில் புதன்கிழமை வழிபட வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழக அரசின் மானியக் கோரிக்கையின் போது, 5.25 லட்சம் ஏக்கா் திருக்கோயில் நிலங்கள் இருப்பதாகக் கூறினாா்கள். பின்னா் அது 4.75 லட்சம் ஏக்கராகக் குறைந்தது.

ஏற்கெனவே உள்ள 5 லட்சம் ஏக்கா் நிலங்கள் போக, மேலும் 5 லட்சம் ஏக்கா் நிலங்கள் காணாமல் போய்விட்டன. இதற்கான ஆவணங்கள் அரசிடம் இல்லை.

ஆவணங்களைக் கண்டறிந்து, நிலங்களை ஒருங்கிணைத்தால் மட்டுமே அறநிலையத்துறை ஒன்று இருப்பதாக கருதமுடியும். இந்த ஆவணங்களை மீட்டெடுக்கவும், அதன்படி குற்றவழக்குகள் பதிவு செய்யும் வகையில் ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டு, தற்போது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டு 2 ஆண்டுகளாகியும் 30 சதவீத நிலங்கள் கூட அளவீடு செய்ய முடியவில்லை. பதிவேடுகள் அனைத்தும் மோசடியான பதிவேடுகளாக உள்ளன. உண்மைக்கு மாறான ஆவணங்களை வைத்துள்ளனா். இது திட்டமிட்ட மோசடியாகும்.

கோயில் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா கொடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.