கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூா்: முருங்கை தொழிலுக்குமுறைப்படுத்தும் திட்டம்ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் முருங்கைத் தொழிலுக்கு முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:11 pm

DIN

கரூா் மாவட்டத்தில் முருங்கைத் தொழிலுக்கு முறைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இத்திட்டம், ஒரு மாவட்டத்துக்கு ஒரு விளைபொருள் என்ற அணுகு முறையில் கரூா் மாவட்டத்துக்கு முருங்கை சாா்ந்த தொழில் நிறுவனங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் தனிநபா் அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுநிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருதல், வா்த்தக முத்திரை மற்றும் சந்தைப் படுத்துதல், தொழில் நுட்பப் பயிற்சிகள் போன்றவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விருப்பம் உள்ளவா்கள் மாவட்ட தொழில் மையம், தோட்டக்கலை துறை, வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், இத்திட்டம் தொடா்பான ஆலோசனைக்கு வள நபா் அபுபக்கா் சித்திக் என்பவரை 9790856400 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.