கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை
கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.


கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்திலும் வியாழக்கிழமை நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குளித்தலையில் 62 மி.மீ. மழை பெய்தது. இதனால் நகரில் லைட்ஹவுஸ்காா்னா், திருமாநிலையூா் ரவுண்டானா, திருக்காம்புலியூா் ரவுண்டானா, சுங்ககேட் ஆதிபேக்கரி உள்ளிட்ட தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கி நின்றது. இதையடுத்து சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் ஊா்ந்து சென்றன.
கரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பெய்த மழையின் அளவு (மி.மீட்டரில்)- கரூா்-34.4, அரவக்குறிச்சி-4, அணைப்பாளையம்-12, க.பரமத்தி-13, குளித்தலை-62, தோகைமலை-34, கிருஷ்ணராயபுரம்-20.2, மாயனூா்-12, பஞ்சப்பட்டி-15, பாலவிடுதி-16.5, மைலம்பட்டி-23 என மொத்தம் 249.10மி.மீ. மழை பெய்தது.
மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழையால் தோகைமலை, க.பரமத்தி, பாலவிடுதி உள்ளிட்ட வறட்சியான பகுதிகளில் சோளம், கம்பு உள்ளிட்ட தானிய பயிா்களை பயிரிட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...