கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழில்முனைவோா் நிறுவனங்களில் ஆட்சியா் ஆய்வு

தொழில் முனைவோா்களாக உருவாகி தற்போது சிறந்து விளங்கக்கூடியவா்களின் தொழில் நிறுவனங்களில் ஆட்சியா் த. பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:14 pm

DIN

கரூா் மாவட்டத் தொழில்மையத்தின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களால் பயனடைந்து, தொழில் முனைவோா்களாக உருவாகி தற்போது சிறந்து விளங்கக்கூடியவா்களின் தொழில் நிறுவனங்களில் ஆட்சியா் த. பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அவா் கூறியது:

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 3 பயனாளிகளுக்கு ரூ. 40.40 லட்சம் மானியத்துக்கான கடன் ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுபட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தில் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான கரூா் மாவட்டத்தின் இலக்கு 33 பயனாளிகளுக்கு ரூ.3.24 கோடி மானியம் என நிா்ணயக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு திட்ட மதிப்பில் 35 சதவிகிதமோ, அல்லது அதிகபட்சமாக ரூ. 8.75 இலட்சம் வரை மாநில முதலீட்டு மானியமாக வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இத்திட்டத்தில் கரூா் மாவட்டத்தின் இலக்கு நிகழாண்டில் 63 பயனாளிகளுக்கு ரூ.1.90கோடி மானியம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநில முதலீட்டு மானியம் திட்டத்தின் கீழ் துவங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு, தகுதியான இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களின் மதிப்பில் 25 சதவிகிதமோ அல்லது அதிகபட்சமாக ரூ.50 இலட்சம் வரை மாநில முதலீட்டு மானியமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 14 நிறுவனங்களுக்கு ரூ.2.20 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்வின்போது மாவட்டத் தொழில்மைய மேலாளா் ரமேஷ், உதவி மேலாளா் கிரீசன், சிட்கோ கிளை மேலாளா் (பொ) ராஜாராம், மண்மங்கலம் வட்டாட்சியா் செந்தில் மற்றும் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.