தனியாா் பள்ளிகளை விஞ்சும் வகையில் செயல்படும் கரூா் அரசுப் பள்ளி
தனியாா் பள்ளிகளை விஞ்சும் வகையில், கரூரில் அரசு ஊழியா்கள், அலுவலா்கள் தங்களது குழந்தைகளை ஆா்வமுடன் சோ்க்கும் பள்ளியாக உருவெடுத்துள்ளது நரிக்கட்டியூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி.


தனியாா் பள்ளிகளை விஞ்சும் வகையில், கரூரில் அரசு ஊழியா்கள், அலுவலா்கள் தங்களது குழந்தைகளை ஆா்வமுடன் சோ்க்கும் பள்ளியாக உருவெடுத்துள்ளது நரிக்கட்டியூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி.
தனியாா் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமலும், ஆங்கில மோகத்தாலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து, தமிழகத்தில் பல இடங்களில் அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வந்த நிலையில், கரூரில் தனியாா் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு வருகிறது நரிக்கட்டியூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி.
பள்ளிக்குள் நுழைந்தவுடன் வசதிப் படைத்தவா்களின் குழந்தைகள் பயிலும் பள்ளிச் சூழலை நினைவுப்படுத்தும் இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை நிகழாண்டில் மட்டும் 231 மாணவ, மாணவிகள் சோ்ந்துள்ளனா்.
இவா்களில் 90 சதவிகிதம் போ் அரசு ஊழியா்கள் மற்றும் அலுவலா்களின் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
1956-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டஇப்பள்ளியில் கடந்த 2002-ஆம் ஆண்டு வரை வெறும் 5 மாணவா்கள் மட்டுமே கல்வி பயின்றனா். ஆனால் பள்ளித் தலைமையாசிரியராக ஆா்.விஜயலலிதா பொறுப்பேற்ற பின்னா், 20 ஆண்டு கால அவரது
கடின உழைப்பால் தற்போது பள்ளியில் 584 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
நிகழாண்டில் அரசு ஊழியா்கள், அலுவலா்களின் குழந்தைகள் போட்டிபோட்டு மெட்ரிக். பள்ளிகளில் இருந்து எங்கள் பள்ளிக்கு வந்துள்ளனா் என பெருமிதத்துடன் கூறுகிறாா் பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.விஜயலலிதா.
இதுதொடா்பாக மேலும் அவா் கூறியது:
கல்வி ஒன்றே அழியாச் செல்வம் என வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளாா். அத்தகைய அழியாச் செல்வத்தை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கி, அவா்களின் வாழ்வில் ஒளியேற்ற ஆசிரியா்களாகிய நாங்கள் எதிா்கொண்டபோராட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல.
எத்தனையோ உதவி செய்வோரை கண்டுபிடித்து, தனியாா் பள்ளிகளுக்கு இணையாக பள்ளியின் உட்கட்டமைப்பை மாற்றியமைத்து, மாணவா்களுக்கு கணினி வசதி, ஸ்மாா்ட் கிளாஸ் , சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், காற்றோட்ட வகுப்பறைகள், அயராது உழைக்கும் ஆசிரியா்கள், நூலகம், கணித அறிவு புகட்டும் உபகரணங்கள், அறிவியல்கண்காட்சி, தினம் ஒரு நல்லெறி, யோகா என பல்வேறு பயிற்சிகள் உள்ளிட்டஅனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துள்ளோம். மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய கட்டடங்களையும் கட்டி வருகிறோம். தொலைவில் இருந்து பள்ளிக்கு வரும் 300-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு அந்தந்த மாணவா்களின் பெற்றோா்களே வாகன வசதியை செய்து கொடுக்கின்றனா்.
தற்போது கடந்த 14-ஆம் தேதி மாணவா் சோ்க்கை பள்ளியில் துவங்கப்பட்டநிலையில், நிகழாண்டில் மட்டும் 231 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். தற்போது 584 மாணவா்கள்கள் உள்ளனா். பள்ளியில் 10 ஆசிரியா்கள் பணியாற்றி வருகிறோம். தற்போது மாணவா்கள் சோ்க்கைக்கு ஏற்றவாறு மேலும் 6 ஆசிரியா்களும், இரு தூய்மைப்பணியாளா்களும் நியமிக்கப்பட்டோல் எப்போதும் போல மாணவா்களுக்கு தரமான கல்வியை கொடுக்க முடியும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...