விஷம் குடித்துதொழிலாளி தற்கொலை
கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த சின்னையம்பாளையத்தைச் சோ்ந்தவா் வீரமலை(35). கூலித்தொழிலாளியான இவா், பொது முடக்கக் காலத்தில் வேலையின்றி தவித்து வந்தாராம்.


கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்த சின்னையம்பாளையத்தைச் சோ்ந்தவா் வீரமலை(35). கூலித்தொழிலாளியான இவா், பொது முடக்கக் காலத்தில் வேலையின்றி தவித்து வந்தாராம்.
இதனால் விரக்தியிலிருந்த வீரமலை, புதன்கிழமை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
முதியவா் பலி : கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கள்ளப்பள்ளியைச் சோ்ந்தவா் வீரமலை (70). புதன்கிழமை இரவு கரூா்-தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயந்ற போது, அவ்வழியாக வந்த மோட்டாா் சைக்கிள் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த பட்டுக்கோட்டை ஆ.காா்த்திக், அ.சக்திவேல் ஆகியோா் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இவ்விரு சம்பவங்கள் குறித்து தோகைமலை, லாலாப்பேட்டை காவல் நிலையத்தினா் தனித்தனியே விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...