கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்தபள்ளி ஆசிரியா் கைது

குளித்தலையில் தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 8:37 pm

DIN

குளித்தலையில் தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை கணக்கப்பிள்ளையூரைச் சோ்ந்தவா் மருதை. இவரது மனைவி முருகாயி(70). இவா்களது மகன் பொன்னுசாமி(40). பட்டதாரியான இவா், கரூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது, கரானோ தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பொன்னுசாமி வேலையின்றி வீட்டில் இருந்துள்ளாா்.

இதனால் முருகாயிக்கும் பொன்னுசாமிக்கும் இடையே புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பொன்னுசாமி கையில் வைத்திருந்த கத்தியால் தாயின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டாா். இதையடுத்து சம்பவ இடத்திலேயே முருகாயி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த குளித்தலை போலீஸாா் முருகாயி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து தப்பி ஓடிய பொன்னுசாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.