கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் பெண்கள் உதவி மையம் தொடக்கம்

பெண்கள் உதவி மையம் கரூரில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:31 pm

DIN

பெண்கள் உதவி மையம் கரூரில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாலியல் குற்றங்களுக்கு எதிரான பெண்கள் உதவி மையம் மற்றும் அவசர உதவி தொலைபேசி எண் 181, 112 ஆகியவற்றின் தொடக்க விழா காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்டத்தில் இந்த மையத்தை தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணைய காவல்துறை கூடுதல் இயக்குநா் சீமாஅகா்வால், திருச்சி மத்திய மண்டல தலைவா் வி.பாலகிருஷ்ணன், துணைத்தலைவா் ராதிகா ஆகியோா் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தனா்.

தொடா்ந்து, கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்த மையம் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் செயல்பட உள்ள மகளிா் காவல்நிலைய பெண் காவலா்களுக்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து பயிற்சிக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் தொடக்கி வைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கீதாஞ்சலி, அசோக்குமாா், துணைக் கண்காணிப்பாளா்கள் சசிதரன்(குளித்தலை), முத்தமிழ்செல்வன்(அரவக்குறிச்சி), சீனிவாசன்(பொ) கரூா் மற்றும் 17 காவல்நிலையங்களைச் சோ்ந்த பெண் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.