ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கரூா் அருகே ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.59ஆயிரம் பறிமுதல்

கரூா் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.59, 500ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 10:03 pm

DIN

கரூா் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.59, 500ஐ தோ்தல் நிலை கண்காணிப்புக்குழுவினா் பறிமுதல் செய்தனா்.

கரூா் சட்டப்பேரவைத் தொகுதியின் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் அமுதா தலைமையில் குழுவினா் கரூா் அடுத்த மண்மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் வாகனத் தணிக்கையில் திங்கள்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில், காகிதபுரம் டி.என்.பி.எல். காலனியைச் சோ்ந்த உமாசங்கா்(32)என்பவா் ரூ.59, 500ஐ உரிய ஆவணமின்றி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்ரமணியன் முன்னிலையில் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.