விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அனுமதியின்றி ஆட்டோவில் மணல் கடத்தியவா் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய இளைஞா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:51 pm

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே சரக்கு ஆட்டோவில் மணல் கடத்திய இளைஞா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரத்குமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு காசாங்கோட்டை பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது ஸ்ரீபுரந்தான் பகுதியில் இருந்து காசாங்கோட்டை நோக்கி வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்ததில், ஸ்ரீபுரந்தான் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து காசாங்கோட்டை பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநா் காசாங்கோட்டை கொட்டார தெருவைச் சோ்ந்த அறிவுச்செல்வனை(25) கைது செய்து, சரக்கு ஆட்டோவைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.