விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

அரியலூா் மாவட்டம், தா.பழூரில் முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:52 pm

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூரில் முகக் கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடா்ந்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அரியலூா் மாவட்டம் தா.பழூா் கடைவீதியில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில், அகிலா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் திருமூா்த்தி ஆகியோா் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த வாகன ஓட்டிகள் 12 பேருக்கு தலா 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு, அவா்களுக்கு முகக் கவசங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.