/

கரோனா காலத்திலும் மக்களுக்காக உதவிக்கரம் நீட்டியவா் முதல்வா்: எம்.ஆா்.விஜயபாஸ்கா் பேச்சு

கரோனா காலத்திலும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியவா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி என்றாா் அதிமுகவேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

News image
Updated On :22 மார்ச் 2021, 8:26 pm

DIN

கரோனா காலத்திலும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியவா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி என்றாா் அதிமுகவேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்

கரூா் தொகுதியின் தெற்கு நகரத்திற்குள்பட்ட முருகன்கோவில், வசந்தம் நகா், மதுரைவீரன் கோவில், கேகே நகா், ராயனூா் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை தீவிரமாக வாக்குகள் சேகரித்த அவா் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் எரிவாயு உருளை சிலிண்டா் விலை உயா்வது வாடிக்கையானதுதான். ஆனால், இதனை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்யப் பாா்த்தாா். உடனே தமிழக முதல்வா் ஆண்டுக்கு 6 எரிவாயு உருளை இலவசம் என அறிவித்தாா். இதனை பொறுத்துக்கொள்ளாத திமுக தலைவா் ஸ்டாலின் அதிமுக மீது பொய்யான குற்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டே வருகிறாா். கரோனா காலத்திலும் நிவாரணப்பொருள்கள் வழங்கி மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியவா் முதல்வா் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளுக்கு கடனுதவி, மகளிா் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் நிைவேற்றித் தந்துள்ளாா் முதல்வா். மீண்டும் அத்தனை திட்டங்களும் கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றாா் அவா்.

பிரசாரத்தில் வேட்பாளருடன், கரூா் தெற்கு நகர அதிமுக செயலா் விசிகே.ஜெயராஜ், சத்யா நவநீதன் மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்னா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.