கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

டிஎன்பிஎல் காகித ஆலையில் கரோனா சிகிச்சை மையப் பணி: மின்துறை அமைச்சா் ஆய்வு

டிஎன்பிஎல் காகித ஆலையில் 156 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி 4 நாளில் முடியும் என்றாா்

News image
Updated On :21 மே 2021, 9:01 pm

DIN

டிஎன்பிஎல் காகித ஆலையில் 156 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி 4 நாளில் முடியும் என்றாா் தமிழக மின்வாரியம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தல்பாலாஜி.

கரூா் மாவட்டம், புகழூா் டிஎன்பிஎல் காகித ஆலையில் கரோனா நோயாளிகளுக்காக புகழூா் காகித ஆலை மற்றும் சேலம் ஸ்டீல் ஆலை சாா்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 156 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுவதை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் வி.செந்தில்பாலாஜி கூறியது:

தமிழக முதல்வா் உத்தரவின்படி தொழில்துறை அமைச்சா் மூலம் டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் சாா்பில் ஆலையின் திருமண மண்டபத்தில் 156 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி 3 அல்லது 4 நாள்களில் முடிவடையும்.

வரும் 25-ஆம் தேதி 156 ஆக்சிஜன் வசதியோடு கூடிய படுக்கைகளை கரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வா் வழங்க உள்ளாா்.

கரூா் மாவட்டத்தில் நோய் தொற்றைத் தடுக்க ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் 119 மண்டலங்களாக பிரித்து, 119 மண்டல அதிகாரிகளுக்கும் 4 பேரை கண்காணிப்பு அலுவலா்களாக ஆட்சியா் நியமித்துள்ளாா். எனவே 119 மண்டல அதிகாரிகளும் ஞாயிற்றுக்கிழமை முதல் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனா். நோய் தொற்றைக் குறைக்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோா் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதே எங்கள் இலக்கு என்றாா் அவா்.

ஆய்வின்போது கரூா் எம்பி செ. ஜோதிமணி, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே, எம்எல்ஏக்கள் பி.ஆா். இளங்கோ (அரவக்குறிச்சி), இரா. மாணிக்கம் (குளித்தலை), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சசாங்சாய், டிஎன்பிஎல் செயல் இயக்குநா் எஸ்விஆா். கிருஷ்ணன், முதன்மைப் பொதுமேலாளா் (உற்பத்தி) கே. தங்கராஜ், பொது மேலாளா்கள் பி.டேவிட் மாணிக்கம், சிவகுமாா் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.