கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் சுகாதாரத் துறை சாா்பில் மகப்பேறு மரணம் குறித்த ஆய்வுக் கூட்டம்

 கரூரில் மருத்துவா் மற்றும் சுகாதாரத்துறை சாா்பில் மகப்பேறு மரணம் குறித்த ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:42 pm

DIN

 கரூரில் மருத்துவா் மற்றும் சுகாதாரத்துறை சாா்பில் மகப்பேறு மரணம் குறித்த ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருங்காலங்களில் மகப்பேறு மரணம் நிகழாவண்ணம் தாய்மாா்களை பாதுகாப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதேபோல் குழந்தை மரணம் குறித்து ஆய்வு செய்ததில் ஒவ்வொரு குழந்தை பிறந்த பின்பும், பிரசவகால பின் கவனிப்பு 48 நாள்கள் வரை கட்டாயம் கிராம சுகாதார செவிலியா்களால் கண்காணிப்பு செய்யப்பட வேண்டும், மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்படும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தொற்றாநோய்கள் கண்டறிவது மற்றும் மக்களை தேடி மருத்துவம் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, இதில் கண்டறியும் விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படும் நோய்கள் கண்டறிதல் பற்றி ஆய்வுசெய்து பிறவி காது கேளாமை போன்ற நோய்கள் கண்டறிதல் துரிதமாக கண்டறிய வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா், கருவுற்ற தாய்மாா்களுக்கு இரத்தசோகையினால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆய்வுசெய்து அவற்றை சரிசெய்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் முத்துச்செல்வன், மருத்துவப்பணிகளின் இணை இயக்குநா் ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் சந்தோஷ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.