கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிருஷ்ணராயபுரம் ஒன்றியப் பகுதிகளில்வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் 140 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

போத்துராவுத்தன்பட்டியில் மண் வரப்பு அமைக்கும் பணி நடைபெறுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

Updated On :2 ஜூன் 2022, 7:12 pm

DIN

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் 140 பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட போத்துராவுத்தன்பட்டி, வடுகப்பட்டி, பாக்காப்பட்டி, இரும்பூதிப்பட்டி பகுதிகளில் ஊரக வளா்ச்சி துறை மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 23 ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2021-2022 ம் நிதி ஆண்டில் தனிநபா்கள் பயன்பெறும் வகையில் 205 மண்வரப்பு அமைத்தல் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் 140 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் பணிகளும் நடந்துவருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மந்திராசலம், செயற் பொறியாளா் பாலகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், தவமணி மற்றும் உதவி பொறியாளா்கள் காா்த்திக், கோதைநாயகி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.