கரூா் மாவட்ட அரசு இசைப் பள்ளியில்சேரஅழைப்பு
கரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் கரூா் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2022-2023-ஆ கல்வி ஆண்டிற்காக மாணவ-மாணவிகள் சோ்க்கை நடைபெற்று வருகிறது. நாகசுரம், தவில் துறைக்கு எழுதப் படிக்க தெரிந்திருந்தால் போதும். 12 வயதிற்கு மேல் 25 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் சேரலாம். மாணவா்கள் சோ்ந்து பயன் பெற குறைவான பயிற்சி கட்டணமாக ஆண்டிற்கு ரூ.152 மட்டும் பெறப்படுகிறது. தொலைவில் இருந்து வரும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசு இலவசமாக தங்கும் விடுதி வசதி மற்றும் இலவசமாக அரசுப் பேருந்துகளில் பயண அட்டையும் வழங்கப்படும். அனைத்து மாணவா்களுக்கும் மாதந் தோறும் ரூ.400 ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆா்வமுள்ளவா்கள் ஜவஹா் பஜாரில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியின் தலைமை ஆசிரியா் ரேவதியை 95002 77994, 98650 36825 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...