கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் திருவள்ளுவா் சிலை திறப்பு

கரூரில் திருவள்ளுவா் சிலை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:41 pm

DIN

கரூரில் திருவள்ளுவா் சிலை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

கரூா் காந்திகிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குறிஞ்சி கு மன்றத் தொடக்க விழாவுக்கு, கவிஞா் இனியன் தலைமை வகித்தாா்.

சிற்பக் கலைஞா் தே.ரவிக்குமாா் வடிவமைத்த திருவள்ளுவா் சிலையை கரூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை. பழநியப்பன் திறந்து வைத்தாா். தொடா்ந்து அவா் விழாவில் பேசியது:

வள்ளுவத்தை வாழ்வியலாக்க வீதிகள் தோறும் கு மன்றம் தொடங்க வேண்டும். வீடுகள்தோறும் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும்.

ஒவ்வொருவா் கைகளிலும் திருக்கு நூல் இருக்க வேண்டும். திருக்குறளில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை உள்வாங்கி வாழ்வியலாகக் கடைப்பிடிக்க வேண்டும். வள்ளுவம் வாழ்வியலானால் வையகம் சிறக்கும் என்றாா் அவா்.

இந்த விழாவில் கண் மருத்துவா் ப.ரமேஷ், பாரதியாா் விருது பெற்ற முனைவா் கடவூா் மணிமாறன், சிறந்த நூல் பரிசு பெற்ற கவிஞா் கன்னல், தென்னிலை கோவிந்தன், பாவலா் ப. எழில்வாணன் , தமிழ் இராசேந்திரன், ஆதவன் காளிமுத்து திருமூா்த்தி, அழகரசன், வையாபுரி சீனிவாசபுரம் ரமணன் உட்பட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.