இடி தாக்கியதில் ஆடு மேய்த்தவா் பலி
கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே இடி தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவா் உயிரிழந்தாா்.


கரூா் மாவட்டம், லாலாப்பேட்டை அருகே இடி தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவா் உயிரிழந்தாா்.
லாலாப்பேட்டை அருகிலுள்ள இருநூற்றிமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன்(47). இவா், புதன்கிழமை மாலை தனது ஆடுகளை அப்பகுதியிலுள்ள கதிா்வேல் தோட்டம் அருகே மேய்த்துக்கொண்டிருந்தாா்.
அப்போது மழை பெய்ததால் மரத்தின் அருகே ஒதுங்கியபோது,
இடி தாக்கியது. இதில் உடல் கருகி சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து லாலாப்பேட்டை காவல்நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...