கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குறுவை சாகுபடிக்கானவிதை உரம் தயாராக உள்ளது: கரூா் மாவட்ட ஆட்சியா்

குறுவை சாகுபடிக்கான விதை உரம் தயாராக உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

News image
Updated On :26 மே 2022, 7:31 pm

DIN

குறுவை சாகுபடிக்கான விதை உரம் தயாராக உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா்.

கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணா அரங்கில் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமையில் நடைபெற்றது. குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா.மாணிக்கம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், வேளாண் இடுபொருள்கள் தங்கு தடையின்றி கிடைப்பது தொடா்பாகவும், புலியூா் வாய்க்கால் சீரமைக்கவும், இயற்கை முறையில் விவசாயம் செய்திட இயற்கை மண் புழு உரம் கிடைத்திடவும், கால்நடை கிளை மருத்துவமனைகளை அமைத்திடவும், கிராமப்பகுதிகளில் சிறுதொழில் செய்திட தேவையான கடன் உதவிகளை செய்திடவும் விவசாயிகள் தரப்பில் ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடா்ந்து ஆட்சியா் கூறுகையில், கட்டளை மேட்டு வாய்க்கால் தூா் வாரும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு விண்ணப்பப் படிவங்கள் எடுத்துக் கொள்ளலாம். குறுவை சாகுபடிக்கான விதை, உரம் தயாராக உள்ளது. தூா்வாரும் பணிகளில் 100 சதவீதம் சிறப்பாக நடை பெற்று காவிரி டெல்டா மாவட்டங்களில் கரூா் மற்றும் அரியலூா் மாவட்டங்கள் முதலிடத்தில் உள்ளது என்றாா் அவா்.

பின்னா், கூட்டுறவுத்துறையின் மூலம் 4 சுய உதவிக் குழுவினருக்கு ரூ.5. 60 லட்சம் மதிப்பில் கடனுதவிகளையும், மூன்று மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கடனுதவிகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பிலான கறவை மாடு பராமரிப்பு கடன்களையும், தோட்டக்கலைத் துறையின் சாா்பாக 3 பயனாளிகளுக்கு விதைச் சான்று, வரப்பு செடிகள் ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், வேளாண்மை இணை இயக்குநா் சிவசுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியா்கள் புஷ்பதேவி(குளித்தலை), சந்தியா(கரூா்), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் இளஞ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கலைச்செல்வி, முன்னோடி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.