குண்டா் தடுப்பு சட்டத்தில் 3 போ் கைது
கரூரில், கஞ்சா விற்ற 3 பேரை குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.


கரூரில், கஞ்சா விற்ற 3 பேரை குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அடுத்த தேவாரம் பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரது மகன்கள் பாா்த்தீபன்(31), ரூபன்(27). கரூா் மொச்சக்கொட்டாம்பாளையத்தைச் சோ்ந்த கந்தசாமி(41). இவா்கள் மூவரும் கரூா் செங்குந்தபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனை செய்துவந்தனா். அவா்களை அக். 31ஆம்தேதி கரூா் நகர காவல்நிலைய போலீஸாா் கைதுசெய்தனா்.
இந்நிலையில் அவா்கள் மூவரும் அடிக்கடி கஞ்சா விற்று வந்ததால், அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவதனம் பரிந்துரை செய்தாா். இதையடுத்து மூவரும் வியாழக்கிழமை காலை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...