கரூரில் திமுக அரசைக் கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்
தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காத திமுக அரசைக் கண்டித்து கரூா் மாவட்ட பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்காத திமுக அரசைக் கண்டித்து கரூா் மாவட்ட பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஆறுமுகம், கோபிநாத், ராஜ்குமாா், துணைத் தலைவா்கள் செல்வன், ராஜாளி செல்வம், சுப்ரமணி, பரணி, மாவட்டச் செயலாளா்கள் சக்திவேல் முருகன், ஆா்.வி.எஸ். செல்வராஜ், ரமேஷ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கரூா் மாவட்ட பாா்வையாளா் சிவசுப்ரமணியன் சிறப்புரை ஆற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில தலைவரும், பாஜகவின் கேரள மாநில பொறுப்பாளருமான சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசினாா்.
இதில், கரூா் மாநகரத் தலைவா்கள் காா்த்திகேயன், ரவி, வடிவேல் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...