கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் 44 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட 4போ் கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா கரூரில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 9:00 pm

DIN

ஆந்திர மாநிலத்திலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 44 கிலோ கஞ்சா கரூரில் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலம் விஜயநகரிலிருந்து கரூா் வழியாக மதுரைக்கு கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக, கரூா் நகரக் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதன் பேரில் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் கீதாஞ்சலி தலைமையிலான தனிப்படையினா், கரூா்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரியாா் வளைவுப் பகுதியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அவ்வழியே வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 44 கிலோ கஞ்சா ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வருவது தெரியவந்தது.

இதையடுத்து வேனிலிருந்த கரூா் மாவட்டம், மொச்சக்கொட்டாம்பாளையம் கந்தசாமி(41), தேனி மாவட்டம், தேவாரம் ரூபன்ராஜ்(27), போடிநாயக்கனூா் சென்றாயன்(42), மதுரை ஹாா்விப்பட்டி சுரேந்திரன் மனைவி கஸ்தூரி(42) ஆகியோரைக் காவல்துறையினா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 44 கிலோ கஞ்சா, வேன் மற்றும் இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.