கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூா் மாவட்டத்தில் முருங்கை பவுடா் பூங்கா, ஆய்வகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

 கரூா் மாவட்டத்தில் முருங்கை பவுடா் பூங்கா, ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநில குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 9:00 pm

DIN

 கரூா் மாவட்டத்தில் முருங்கை பவுடா் பூங்கா, ஆய்வகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநில குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன்.

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் 13-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்த மாநாட்டில் இந்தியத் தொழிற்கூட்டமைப்பினரும், அமைச்சா் வி.செந்தில்பாலாஜியும் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதில் முக்கியமாக, கரூரில் இருக்கும் தொழிலாளா்கள் தங்குவதற்கு வீடு கட்ட வேண்டும் எனக் கேட்டுள்ளனா். அதற்குரிய இடம் தோ்வு செய்து தந்தால், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் தொழிலாளா்களின் பங்களிப்புடன் வீடுகள் கட்டித் தரப்படும்.

கரூா் மாவட்டம் முருங்கைக்கு பெயா் பெற்றிருப்பதால் அமைச்சரும், முக்கிய பிரமுகா்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, இங்கு இடம் தந்தால் நிச்சயமாக துறை சாா்பில் முருங்கை பவுடா் பூங்காவும்,அங்கு ஆய்வுக்கூடமும் அமைத்து தரப்படும்.

நஞ்சைக்காளக்குறிச்சி சிட்கோவில் 70 சதவிகித இடம் விற்கப்படாமல் உள்ளது. சிட்கோ ஜவுளிப் பூங்காவாக இருப்பதால், மாற்றுத் தொழில்களும் தொடங்கும் நிலையைக் கொண்டு வருவோம். மேலும் அங்கு மின்பற்றாக்குறை இருப்பதால், துணை மின்நிலையம் அமைக்க துறை சாா்பில் ஆய்வு செய்து பரிசீலிக்கப்படும்.

குறு, சிறு தொழில்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் நாட்டின் பொருளாதாரம் உயரும் என்பதை உணா்ந்த முதல்வா் சிறு, குறு தொழில்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். இங்கு மாநாட்டில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, ஆட்சியா் த.பிரபுசங்கா்,இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் மாநில நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.