கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் அதிமுகவினா் ஆலோசனை

 பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்துவது தொடா்பாக கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 8:21 pm

DIN

 பேரறிஞா் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடத்துவது தொடா்பாக கரூரில் மாவட்ட அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதிமுக மாவட்டச் செயலரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி அமைப்புச் செயலா் ம. சின்னசாமி, மாவட்ட அவைத் தலைவா் எஸ். திருவிகா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேரறிஞா் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை கரூா் மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் கண்ணதாசன், இளைஞரணிச் செயலா் தானேஷ், இணைச் செயலா் மல்லிகா சுப்பராயன், கரூா் ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், இலக்கிய அணிச் செயலா் என்எஸ். கிருஷ்ணன், பகுதிச் செயலா் சேரன் பழனிசாமி, மாவட்ட அமைப்புசார அணிச் செயலா் ரெங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.