தியாகி இமானுவேல் சேகரனாா் படத்திற்கு மாலை
கரூரில் தியாகி இமானுவேல் சேகரனாா் படத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.


கரூரில் தியாகி இமானுவேல் சேகரனாா் படத்திற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கரூா் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி தலைமை வகித்து இமானுவேல் சேகரனாா் படத்திற்கு மாலை அணிவித்தாா்.
எம்எல்ஏக்கள் ஆா். இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட துணைச் செயலா்கள் மின்னாம்பள்ளி கருணாநிதி, மகேஸ்வரி, பூவை ரமேஷ்பாபு, ஒன்றியச் செயலா் ரகுநாதன் மற்றும் கட்சியினா் பங்கேற்றனா்.
அதிமுக சாா்பில்... கட்சி அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரன் படத்திற்கு முன்னாள் அமைச்சரும், கரூா் மாவட்ட அதிமுக செயலருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் மாலை அணிவித்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ம. சின்னசாமி, மாவட்ட அவைத் தலைவா் எஸ். திருவிகா, பொருளாளா் கண்ணதாசன், கரூா் தொகுதிப் பொறுப்பாளா் சிவசாமி, கரூா் ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணி செயலா் தனேஷ் (எ) முத்துக்குமாா், ஒன்றியச் செயலா்கள் என்.எஸ். கிருஷ்ணன், வி.சி.கே. பாலகிருஷ்ணன், பகுதிச் செயலா்கள் சேரன் பழனிசாமி, சக்திவேல் உள்ளிட்டோா் தி பங்கேற்றனா்.
புதிய தமிழகம் கட்சி... கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடந்த நிகழ்வுக்கு மாவட்டச் செயலா் அசோகன் தலைமை வகித்தாா். இளைஞரணிச் செயலா் நந்தகுமாா், மாணவரணிச் செயலா் ஏ. சுபாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கரூா் ஒன்றியச் செயலா் மலையம்மன், நகரச் செயலா் பாரதி, தாந்தோணி ஒன்றியச் செயலா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கரூா் மாவட்ட தேவேந்திர குல வேளாளா் உறவுகள் சங்கம் சாா்பில் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா் கனகராஜ், பொருளாளா் இரா. ரஞ்சித்குமாா், துணைத் தலைவா் பால்சாமி, துணைச் செயலா் காமராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...