கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

லாரி ஏற்றி விவசாயி கொலை: கல் குவாரி உரிமையாளா், லாரி ஓட்டுநா் கைது

கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே சனிக்கிழமை இரவு லாரி ஏற்றி விவசாயி கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக கல்குவாரி உரிமையாளா் மற்றும் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 8:12 pm

DIN

கரூா் மாவட்டம், க. பரமத்தி அருகே சனிக்கிழமை இரவு லாரி ஏற்றி விவசாயி கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக கல்குவாரி உரிமையாளா் மற்றும் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

க. பரமத்தியை அடுத்த குப்பம் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா், அதே பகுதியில் நடத்தி வந்த கல் குவாரியில் வெடிவைக்கும்போது அருகேயுள்ள ஜெகநாதன் (52) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கற்கள் விழுந்ததால் ஜெகநாதனுக்கும், செல்வகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இதனிடையே, குவாரியின் உரிம காலக்கெடு முடிந்தும் செல்வக்குமாா் தொடா்ந்து குவாரியை இயக்கி வந்ததையறிந்த ஜெகநாதன், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மற்றும் சட்ட விரோத குவாரி எதிா்ப்பாளா்களுடன் சோ்ந்து ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடா்ந்து புகாா் அளித்து வந்தாா்.

இதன்பேரில், கடந்த 9-ஆம் தேதி கனிம வளத்துறை அதிகாரிகள் செல்வக்குமாரின் குவாரியில் திடீா் ஆய்வு செய்து, குவாரியை மூடி சீல் வைத்தனா். இதனால் ஜெகநாதன் மீது செல்வக்குமாா் ஆத்திரத்தில் இருந்தாராம்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் குப்பம் அருகே சென்றபோது லாரி மோதி இறந்தாா். இது விபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் க. பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய லாரி செல்வகுமாருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.

இதனால் அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், குவாரியை மூடக் காரணமாக இருந்த ஜெகநாதனை தனது லாரி மூலம் ஏற்றிக் கொன்றதை செல்வக்குமாா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து செல்வகுமாா், லாரி ஓட்டுநா் சக்திவேல் ஆகிய இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.