அரவக்குறிச்சி, ஏப்.26: அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட எட்டியாக்கவுண்டனூரில் நிலவும் குடிநீா் பற்றாக்குறையை போக்கக் கோரி சாலை மறியலுக்கு அனுமதி கோரி பொதுமக்கள் போலீஸில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட எட்டியாக்கவுண்டனூா் பகுதியில் சுமாா் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம். இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த இப்பகுதி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்துக்கு அனுமதி வழங்க கோரி அரவக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மேலும் பேரூராட்சி செயல் அலுவலா் ஆனந்தரிடம் மனு கொடுக்க சென்றபோது அவா், குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் குடிநீா் வழங்கப்படவில்லை எனவும், பணியை விரைந்து முடித்து திங்கள்கிழமை காலை குடிநீா் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தாா்.
தொடர்புடையது

சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரி விவசாயிகள் மனு

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

