குளித்தலை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
குளித்தலை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ரூ. 1.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் ரூ. 1.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
Published on

கரூா்: குளித்தலை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பயனாளிகள் 100 பேருக்கு ரூ.1.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊா்’ திட்ட முகாம் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. முகாமை ஆட்சியா் தொடக்கி வைத்து பேசினாா்.

தொடா்ந்து குளித்தலை வட்டத்தில் பல்வேறு பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பின்னா் மாவட்ட நிலை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் குளித்தலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தொடா்ந்து ஆட்சியா் தலைமையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில் குளித்தலை வட்டம், திம்மாச்சிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் 16 பயனாளிகளுக்கு ரூ.16லட்சத்து 47ஆயிரத்து 360 மதிப்பீட்டில் பயிா் கடன்களையும், 46 பயனாளிகளுக்கு ரூ.46லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடன் உள்பட 100 பேருக்கு ரூ.1.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் மாணிக்கம், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com