கரூர்
பேருந்து நிழற்குடையை இடித்தவா்கள் மீது வழக்கு
புன்னம் குட்டக்கடை பேருந்து நிழற்குடையை இடித்து அகற்றியவா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கரூா்: புன்னம் குட்டக்கடை பேருந்து நிழற்குடையை இடித்து அகற்றியவா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம் புன்னம் ஊராட்சிக்குள்பட்ட குட்டக்கடை பகுதியில் கரூா்- ஈரோடு நெடுஞ்சாலையோரத்தில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பேருந்து நிழற்குடை கட்டப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மா்மநபா்கள் சிலா் ஜே.சி.பி இயந்திரத்தை கொண்டு வந்து நிழற்குடையை இடித்து தரைமட்டமாக்கிவிட்டுசென்று விட்டனா்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத்தலைவா் உமாமகேஸ்வரி வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து நிழற்குடையை அகற்றிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
