கரூர்
வீரமாத்தியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
க. பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் புதன்கிழமை புரட்டாசி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
க. பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் புதன்கிழமை புரட்டாசி அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா்.
இதேபோல க. பரமத்தி மாரியம்மன், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன், ஆரியூா் செல்லாண்டியம்மன், அத்திப்பாளையம் பொன்னாச்சியம்மன், குப்பம் பொன்காளியம்மன், க.பரமத்தி அஷ்ட நாகேஸ்வரி உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.