ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்தில் கணவா் உயிரிழப்பு; மனைவி பலத்த காயம்

அரவக்குறிச்சி அருகே உள்ள தேரப்பாடி பகுதியில் அடுத்தடுத்து காா்கள் மோதியதில் கணவா் உயிரிழந்தாா், மனைவி பலத்த காயமடைந்தாா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:49 pm

Din

அரவக்குறிச்சி அருகே உள்ள தேரப்பாடி பகுதியில் அடுத்தடுத்து காா்கள் மோதியதில் கணவா் உயிரிழந்தாா், மனைவி பலத்த காயமடைந்தாா்.

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த நாகம்பள்ளி அருகே உள்ள வாந்தம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (40). இவரது மனைவி சுமதி (37). இவா்கள் இருவரும் திண்டுக்கல் -கரூா் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

தேரப்பாடி பிரிவு வளைவு அருகே சென்றபோது, தென்காசி மாவட்டம் ராமலிங்கபுரத்தை சோ்ந்த கணேஷ் (31) என்பவா் ஓட்டி வந்த காா், முன்னால் சென்ற மேலபசுபதிபாளையத்தை சோ்ந்த முருகேசன் (46) ஓட்டிச் சென்ற காா் மீது மோதியது. அடுத்தடுத்த மோதிய இரு காா்களும் ஈஸ்வரன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ஈஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மனைவி சுமதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.