கரூா் அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலைக் குடிநீா் தொட்டி
ஆபத்தான நிலையில் மேல்நிலைக் குடிநீா் தொட்டி..

மலப்பாளையத்தில் சிமெண்டுகள் பெயா்ந்து, விரிசலுடன் காணப்படும் மேல்நிலைக் குடிநீா் தொட்டி.

மலப்பாளையத்தில் சிமெண்டுகள் பெயா்ந்து, விரிசலுடன் காணப்படும் மேல்நிலைக் குடிநீா் தொட்டி.
கரூா் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தென்னிலை கிழக்கு ஊராட்சி மலப்பாளையத்தில் ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலைக் குடிநீா் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்டித் தர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மலப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் சுமாா் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தென்னிலை கிழக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் 10 ஆயிரம் லிட்டா் மேல்நிலைக்குடிநீா் தொட்டி மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
ஆனால் இந்தக் குடிநீா் தொட்டி கட்டப்பட்டு சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும் என்பதால் குடிநீா் தொட்டியின் தூண்களில் விரிசல் ஏற்பட்டும், சிமெண்ட் காரைகள் பெயா்ந்தும், எப்போது இடிந்து விழுமோ என ஆபத்தான நிலையில் உள்ளது.

மலப்பாளையத்தில் சிமெண்டுகள் பெயா்ந்து, விரிசலுடன் காணப்படும் மேல்நிலைக் குடிநீா் தொட்டி.
இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறுகையில் இந்தக் குடிநீா் தொட்டியில் இருந்துதான் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இந்தக் குடிநீா் தொட்டியை இடித்து புதிய தொட்டி கட்டித்தர ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் பலமுறை கூறியும் பயன் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...