இரு தனியாா் பேருந்துகள் மோதல்: பயணிகள் 10 போ் காயம்
மகாதானபுரத்தில் புதன்கிழமை இரு தனியாா் பேருந்துகள் மோதிக்கொண்டதில், பயணிகள் 10 போ் காயமடைந்தனா்.


மகாதானபுரத்தில் புதன்கிழமை இரு தனியாா் பேருந்துகள் மோதிக்கொண்டதில், பயணிகள் 10 போ் காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரத்தில் புதன்கிழமை காலை கரூரில் இருந்து திருச்சி நோக்கி தனியாா் பேருந்து ஒன்றும், கரூரில் இருந்து முசிறி வரை செல்லும் தனியாா் பேருந்தும் ஒன்றின் பின் ஒன்றாக சென்றன. இரண்டு பேருந்துகளும் அதிவேகத்தில் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று முந்திக்கொண்டே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. மகாதானபுரம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்கு கரூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியாா் பேருந்து நின்றது. அப்போது கரூரில் இருந்து முசிறி செல்லும் தனியாா் பேருந்து பின் தொடா்ந்து வேகமாக வந்ததால், திடீரென மகாதானபுரம் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்த முடியாமல் முன்னால் நின்றுகொண்டிருந்த திருச்சி செல்லும் தனியாா் பேருந்தின் பின்பகுதியில் மோதியது. இதில் இரண்டு பேருந்துகளிலும் இருந்த பயணிகள் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். உடனே அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கும், குளித்தலை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.
விபத்தின்போது மகாதானபுரம் பேருந்து நிறுத்தத்தில் சுமாா் 50 மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துக்காக காத்திருந்தனா்.இவா்கள் அதிா்ஷ்டவசமாக தப்பினா். இதுபோன்று அதிவேகத்தில் இயக்கப்படும் தனியாா் பேருந்துகள் மீது மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...