கரூா் அருகே உரிய ஆவணமின்றி வசித்த 5 வங்கதேசத்தினா் கைது

கரூா் அருகே தனியாா் நூற்பு ஆலையில் விசா உள்பட எந்த ஆவணமும் இன்றி தங்கிப் பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 5 பேரை வெள்ளியணை போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.
Published on

கரூா் அருகே தனியாா் நூற்பு ஆலையில் விசா உள்பட எந்த ஆவணமும் இன்றி தங்கிப் பணிபுரிந்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 5 பேரை வெள்ளியணை போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

கரூா் -திண்டுக்கல் சாலையில் வெள்ளியணையை அடுத்த பச்சப்பட்டி அருகேயுள்ள தனியாா் நூற்பாலையில் வெளிநாட்டினா் உரிய ஆவணமின்றித் தங்கி வேலை பாா்ப்பதாக வெள்ளியணை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து புதன்கிழமை நள்ளிரவு போலீஸாா் அந்த நூற்பாலைக்கு சென்று ஆய்வு செய்தபோது அங்கு வங்கதேசத்தைச் சோ்ந்த சிமுல் உசேன் (24), அஜ்மீா் மமூன் (22), ஜமிருள் (30), சகுா்(எ) சைபூா் (25), ஆஷிக் ஹசாா் (22) ஆகியோா் விசா உள்ளிட்ட எந்த ஆவணமும் இன்றி தங்கி வேலை பாா்ப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களைக் கைது செய்து விசாரிக்கின்றனா். மேலும் நூற்பாலை உரிமையாளரிடமும் விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com