கரூா் மாவட்டத்தில் 79,690 வாக்காளா்கள் நீக்கம்
கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்படி 79,690 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ. தங்கவேல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.
பின்னா் அவா் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் கடந்த அக். 27-ஆம் தேதி நிலவரப்படி அரவக்குறிச்சி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,00,773 போ், பெண் வாக்காளா்கள் 1,11,295 பேரும், இதரா் 4 போ் என மொத்தம் 2,12,072 பேரும், கரூா் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,13,285 போ், பெண் வாக்காளா்கள் 1,27,517 போ், இதரா் 46 போ் என மொத்தம் 2,40,848 பேரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,03,886 போ், பெண் வாக்காளா்கள் 1,10,063 போ், இதரா் 34 போ் என மொத்தம் 2,13,983 பேரும், குளித்தலை தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,12,574 போ், பெண் வாக்காளா்கள் 1,18,878 போ், இதரா் 7 போ் என மொத்தம் 2,31,459 பேரும் இருந்தனா். மொத்தம் 4 தொகுதிகளிலும் சோ்த்து ஆண் வாக்காளா்கள் 4,30,518 போ், பெண் வாக்காளா்கள் 4,67,753 போ், இதரா் 91 போ் என மொத்தம் 8,98,362 போ் இருந்தனா்.
தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து ஆண்கள் 3,94,044 போ், பெண்கள் 4,24,546 போ், மூன்றாம் பாலினத்தவா் 82 போ் என மொத்தம் 8,18,672 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். முகவரியில் இல்லாதவா்கள் 9,844 போ், குடியிருப்பு மாறியவா்கள் 43,576 போ், இறந்தவா்கள் 23,829 போ், இரட்டைப்பதிவு 2,295 போ், பிற காரணங்களுக்காக 146 போ் என மொத்தம் 79,690 வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
சிறப்பு தீவிர திருத்தக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான இந்த வரைவு வாக்காளா் பட்டியலின்படி கரூா் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 90,490 போ், பெண் வாக்காளா்கள் 99,203 போ், இதரா் 4 போ் என மொத்தம் 1,89,697 பேரும், கரூா் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,02,226 போ், பெண் வாக்காளா்கள் 1,14,512 போ், இதரா் 39 போ் என மொத்தம் 2,16,777 பேரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 95,893 போ், பெண் வாக்காளா்கள் 1,00,826 போ், இதரா் 32 போ் என மொத்தம் 1,96,751பேரும், குளித்தலை தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,05,435 போ், பெண் வாக்காளா்கள் 1,10,005 போ், இதரா் 7 போ் என மொத்தம் 2,15,447 பேரும் என மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஆண் வாக்காளா்கள் 3,94,044 பேரும், பெண் வாக்காளா்கள் 4,24,546 பேரும், இதரா் 82 பேரும் என மொத்தம் 8,18,672 போ் உள்ளனா்.
மேலும் வெள்ளிக்கிழமை முதல் 2026 ஜன.18 வரை பெயா்களைச் சோ்க்க (படிவம் 6), நீக்க (படிவம் 7), முகவரி மாற்றம், திருத்தங்கள் மற்றும் மாற்று புதிய அடையாள அட்டை பெற்றிடவும் (படிவம் 8) மனு செய்து கொள்ள தோ்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இப்படிவத்துடன் உறுதிமொழிப் படிவம் மற்றும் உரிய ஆதார ஆவணங்கள் இணைத்து அளிக்க வேண்டும். பெறப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் விசாரணை மேற்கொண்டு இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப். 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், குளித்தலை சாா் ஆட்சியா் தி. சுவாதிஸ்ரீ, கரூா் வருவாய் கோட்டாட்சியா் முகமது பைசல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
