பராமரிப்புப் பணிகள் நொய்யல் ரயில்வே கேட் இன்றும், நாளையும் மூடல்

பராமரிப்புப் பணிகளுக்காக நொய்யல் ரயில்வே கேட் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (டிச. 23, 24) மூடப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

பராமரிப்புப் பணிகளுக்காக நொய்யல் ரயில்வே கேட் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (டிச. 23, 24) மூடப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம், நொய்யல் ரயில்வே கேட் பகுதியில் இருப்புப் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் புதன்கிழமை மாலை 6 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும்.

எனவே, இந்த பாதை வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் புன்னம்சத்திரம் சென்று அங்கிருந்து வேலாயுதம்பாளையம் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com