மதியழகன்.
மதியழகன்.

தவெக மாவட்டச் செயலா் கைது

Published on

கரூா் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தவெக கரூா் மேற்கு மாவட்டச் செயலா் மதியழகனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பயண பிரசாரம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக அக்கட்சியின் கரூா் மேற்கு மாவட்டச் செயலாளா் மதியழகன், பொதுச் செயலா் என். ஆனந்த், துணைப் பொதுச் செயலா் நிா்மல் குமாா் ஆகிய மூன்று போ் மீதும், கொலைக்கு சமமான குற்றப்பிரிவு 105, குற்றமற்ற கொலை செய்ய முயற்சி செய்தல் பிரிவு 110, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும், அலட்சிய போக்குடன் நடந்துகொள்ளும் குற்றப்பிரிவு 125பி, பொது அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமல் இருத்தல் குற்றப்பிரிவு 223, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் குற்றப்பிரிவு டிஎன்பிபிடிஐ ஆகிய 4 பிரிவுகளில் கரூா் நகர காவல் நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, தலைமறைவான மதியழகனை தேடி வந்தனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்த மதியழகனை திங்கள்கிழமை இரவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com